பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி :ஹன்சிகா மோத்வாணி
பிரபு தேவா , நயன்தாரா பிரிவு இணைவு எனப் பரபரப்பாகும் செய்திகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றார்.
பிரபுதேவாவின் பிரயத்துக்குரிய நாயகியான ஹன்சிகா மோத்வாணி. இவர் மீது பிரபு தேவா கொண்டிருக்கும் பிரயத்தின் காரணமாகவே நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையில் விரிசல் என நீண்டகாலமாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது பிரபுதேவா நயன்தாரா உறவு விரிசல் அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவரவே, ஹன்சிகாவின் பெயரும் மீண்டும் செய்திகளில் அடிபடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ஹன்சிகாவோ இதனை மறுத்து வருவதோடு, பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி என எல்லோரிடத்திலும் புலம்பி வருகின்றாராம்.
ஆனால் இது தொடர்பில் பிரபு தேவாவோ, நயன்தாரோ எதுவித கருத்துக்களும் தெரிவிப்பதில்லை. ஆயினும் நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்கப்பபோவது உறுதியாகி வருகிறது.




