ஃபேஸ்புக் உபயோகம்: இந்தியாவில் இருமடங்கு உயர்வு
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக இணையதளமான ஃபேஸ்புக்கைப்
பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஃபேஸ்புக் பயன்பாடு 132 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பிரேசிலில் 268 சதவீதமாக உள்ளது. சீனாவில் சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகக் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு இதனைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை வைத்து இது கணக்கிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் பங்குகளை அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் வெளிவிட முடிவு செய்துள்ளது.



